Friday, November 6, 2009

Vacation

சென்னைவாசிகளே...
வான வேடிக்கைகள் வேண்டாம்....
வண்ண அலங்காரம் வேண்டாம்....
வானுர்தி என் மண்ணை தொடுகையில்
மழை என்னை வரவேற்க காத்திருக்க
சொல்லுங்கள்.........! :)

Sunday, November 1, 2009

ஐந்தாம் பருவத்தில் !!!!!!!

காயமுற்று அழுதிட்டு
ஓடி வந்துன் மடி சாயுமென்
விழியோரத்து நீரை துடைத்திடும்
கணத்தில் குளமாகும் நின்
கண்களை துடைக்க முயன்ற
கைகள் தோற்றுன் கரம் பற்றுதடி
என் வலி மறந்து ........!!


(அஞ்சு வயசுல அடி பட்டு அம்மா கிட்ட அழுதுட்டு வரும் பொழுது நினைவில் நின்றது)

Friday, October 23, 2009

LKG டீச்சர் !!!!

கணினியில் "Auto correct" புரிகையில்
என் நினைவில் நிழலாடுகிறது,
விரல் நுனி பிடித்து சிலேட்டு
பலகையில் திருத்தம் செய்கையில்
உன் முகத்தை தாங்கி நிற்கும்
புன்னகை ...!!
ஏனோ மனம் புன்னகையை எதிர்பார்த்து
ஏமாறுகிறது அதனிடத்தில் !! :(....!

Sunday, October 4, 2009

புரில மக்கா !!!!

காரணம் புரியவில்லை
ஏனோ பிடித்திருக்கிறது.....
அதிகாலை சோம்பலும்
அரைவேக்காடு குளியலும்!!!
குளிர்காலத்தில் என் இருப்பிடம்!

Wednesday, June 3, 2009

என் கவிதைகள்!!


வெறுமை படர்ந்த மனதினுள் ...
விதையாய் விழும் எண்ணங்கள் ..
முளைக்கையில் சிந்தனை சிதறல்கள் ..
வளர்கையில் வார்த்தைகளின் தேடல்கள்...
வாசிக்கையில் புரிபடா பொருட்கள் ...
இவையே என் கவிதைகள் !!!!

Monday, March 30, 2009

விலை!!!

அன்னையின் சமையல்..
தந்தையின் கண்டிப்பு..
தமக்கையின் கிண்டல்,..
தம்பியின் நட்பு..
அனைத்தையும் விற்றாகிவிட்டது
மாதம் மூன்றாயிரம் டாலருக்கு !!!!

Saturday, January 31, 2009

S O N A

உன்னை சீண்டியதற்கு உள்ளம் வருந்துகையில்,
இதழோரமாய் புன்னகை அரும்புகிறது !!!
இன்னோர் முறை கிடைத்த
வாய்ப்பை எண்ணி!!